Monday, May 09, 2011

பழுதான CD/DVD இலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்

இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.

ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.

Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.

இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.

தரவிறக்கச்சுட்டி : Download Get My Videos Back


நமது கம்ப்யூட்டர் முழுதும் ஸ்கேன் செய்யும் சாப்ட்வேர் ?

நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.

மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய வரும். அந்த விண்டோவில் தோன்றும் எதாவது ஒரு நிறத்தின் மீது கர்சரை வைத்தால் அந்த டிரைவின் பெயர், அதில் உள்ள கோப்பறை, அதில் உள்ள கோப்புகளின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரிய வரும்.
இதைப் போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து டிரைவ்களின் விவரத்தை நொடியில் அறிந்து கொள்ளலாம். வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வது மூலம் நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள குப்பைகளை நீக்கலாம்.

ஸ்கேன் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.


நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு

சில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது
விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும்
ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும். இது போன்ற
பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப்
பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1

Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ்
இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி
எதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும்
மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும்
பிழைச் செய்தியை காட்டுகிறது.
இது போன்ற பிரச்சினைக்காக நாம்
விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL
கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி :http://www.dll-files.com
 
இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி
வருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL
கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக
தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி
நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி
வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

Temporary Fileகளை நீக்க பல வழிகள்..

டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல.எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem fileகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை
ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் ` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.சான்றாக நீங்கள் ஏதாவது வேர்ட்(Ms-Word) ஃபைலை பயன்படுத்தும் போது ஃபைலானது `IT CORNER.tmp போன்ற பெயரில் உருவாகும்.` குறியை வைத்து குறிப்பிட்ட ஃபைலானது Temporary ஃபைல் என்று அறிந்துகொள்ளலாம்.பொதுவாகவே tmp ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் இடத்தை விணாக்குபவைகளாகும்.எனவே இவற்றை எனவே இவற்றை குறிப்பிட்ட கால கட்டங்களில் அழித்துவிடுவது நல்லது.tmp ஃபைல்களை நீங்களாகவோ அல்லது ஏதாவது டூலை கொண்டோ அழிக்கலாம்.



  1. Disk defregment பயன்படுத்தினால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் வேண்டாத ஃபைல்கள் குவிந்துள்ள இடத்தினை மீட்கலாம்.Disk defregment பயன்படுத்துவதன் மூலம் tmp ஃபைல்களையும் அழிக்க முடியும்.
  2. My computer Iconஐ திறந்து C Driveஇனுள் உள்ள Windows Folderஐ திறந்து அதனுள் உள்ள Temp ஃபோல்டரை திறந்து அதனுள் உள்ள ஃபைல்களை அழித்து விடுங்கள்..
  3. Startmenu-->Programes-->Accessories-->System Tools வரை Browse செய்யுங்கள் அங்கு Maintenance Wizard Optionஐ தேர்வு செய்து டேம்பரரி ஃபைல்களை அழிக்கலாம்.
  4. அல்லது Run இற்கு சென்று (Windows7 பாவனையாளராக இருந்தால் Search option இல்) .tmp என தேடி அழிக்கலாம்.
  5. இந்த வழிகள் ஒன்றும் பிடிக்க வில்லையென்றால் Tmp ஃபைல்களை அழிக்க நீங்களே எளிய ஒரு Uttility உருவாக்கலாம்,Notepad ஐ திறந்து

C:>copy com a.bat
del/f/s/1 *.*tmp
என டைப் செய்து IT CORNER.bat என்ற பெயரில் டெக்ஸ்டாப்பில் Save செய்து கொள்ளுங்கள்..இனி tmp ஃபைல்கள் உருவாகும் போதெல்லாம் இதனை இரட்டைகிளிக் செய்து ஃபைல்களை அழிக்கலாம்..ஆனால் கணினிமென்பொருள் தேர்ச்சிபெற்றவருடன் இந்த செய்முறைகளை பரிட்சித்து பார்க்கவும்.
06.இவை தவிர டெம்பரரி ஃபைல்களை அழிக்க இணையத்தில் அதிய மென்பொருள்கள் கிடைக்கின்றன..அவை பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்..

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க

ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்
<இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்)
இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது
உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும்
உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்

இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும்.
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
அடுத்து assign letter F என்று உள்ளீடவும்
இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்
பின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD