Sunday, May 15, 2011

F4 KEY நமக்கு எதற்கு ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGJpzG2IT6US7l7HLPjlPCUQ9nEQyNuhKcZRU3GAGKakMm7_Z_HHOUxL4M_0bfVMdNPGl_XD57d7UuiYAypmHy_vQ7wJEIkA4lYP63nBuRHCFZpj0t3dwriYcepDLjkF2pJCaMfYjmLfEK/கம்ப்யூட்டர் பயன்பாட்டில் F4 கீ நமக்குப் பல வகைகளில் பயன்படுகிறது. முதலாவதாக நாம் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றை எளிதாக மூடிட இதனைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினை முதலில் செலக்ட் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். அந்த புரோகிராம் மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் அதனை மீண்டும் உயிர்ப்பித்து செலக்ட் செய்திடலாம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள அதன் கட்டத்தை செலக்ட் செய்திடலாம். அதன்பின் Alt+F4 என்ற வகையில் கீகளை அழுத்தினால் அந்த புரோகிராம் மட்டும் மூடப்படும்.

இரண்டாவதாக நீங்கள் ஒரே ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இயக்கிப் பல டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பினைத் திறந்து அதில் பல டாகுமெண்ட் பைல்களைத் திறந்திருக்கிறீர்கள். அப்போது Ctrl+F4 அழுத்தினால் திறந்திருக்கும் விண்டோ மட்டும் மூடப்படும். புரோகிராம் முழுவதும் மூடப்பட மாட்டாது. F4 கீயினை விண்டோஸ் சிஸ்டத்தை மூடிடவும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களையும் முதலில் மூடிவிடுங்கள். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு பின் Alt + F4 அழுத்தினால் விண்டோஸ் இயக்கம் ஷட் டவுண் செய்யப் படும்.


நம்ம Files Virus ஆ? இல்லையா? என Online இல் ஒரு Checking.

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புக்கள் இருந்தால் (அதாவது Virus தொற்றியிருக்குமோ என நீங்கள் சந்தேகித்தால்) அவற்றை நீங்கள் சோதித்துப் பார்க்க வைரசுடோட்டல் (Virus Total) எனப்படுகின்ற இந்தத் தளம் உங்களுக்கு உதவுகிறது.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் (Anti Virus)கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.
உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.


முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.








கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)

Aladdin (eSafe)

ALWIL (Avast! Antivirus)

Authentium (Command Antivirus)

Avira (AntiVir)

Bit9 (FileAdvisor)


ClamAV (ClamAV)

CA Inc. (Vet)


Eset Software (ESET NOD32)

ewido networks (ewido anti-malware)

Fortinet (Fortinet)


F-Secure (F-Secure)


Hacksoft (The Hacker)



McAfee (VirusScan)

Microsoft (Malware Protection)

Norman (Norman Antivirus)

Panda Security (Panda Platinum)

Prevx (Prevx1)


Secure Computing (Webwasher)

Softwin (BitDefender)

Sophos (SAV)

Sunbelt Software (Antivirus)

Symantec (Norton Antivirus)

VirusBlokAda (VBA32)

VirusBuster (VirusBuster)


முகவரி: http://www.virustotal.com/

பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க

ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?
இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.

1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)

கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.

ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.









அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.

அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.

இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.


2.ரெகுவா(Recuva)

இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.








எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.

எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?


எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


  • அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.

    பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.





  • Saturday, May 14, 2011

    டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

    கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

    உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

    1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
    (குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

    2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

    3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

    4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

    5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

    டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

    1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

    2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

    3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

    4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

    5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

    6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

    ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

    1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

    2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

    3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

    4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

    5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

    இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்

    http://leetleech.org/images/53757816173815256798.png
    copyright © 2011: SPEED WORLD