Saturday, May 21, 2011

Touch Keyboard Laptop - AUO வின் புரட்சி

14-inch அளவு கொண்ட சூரிய சக்தியுடன் இயங்கும் தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட புதிய வகை Laptop இதுவகும்.

இந்த Laptop இல் 2.1mm Thickness கொண்ட Solar Panel இருக்கிறது. இந்த Solar Panel மூலமே Laptop க்கான மின் சக்தி கிடைக்கப்பெறுகிறது. இச் Solar Panel ஐ பயன்படுதி மின்சரத்தை பெறுவதனால் கணினியின் மின் சக்தியை 20% வரை மீதப்படித்தலாம். இந்த Solar Panel ஆனது மடிக்கணினியின் தொடும் விசைப்பலகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் கணப்படும் உறையனது சூரிய ஒளியிலிருந்து, அல்லது வேரு செயற்கையன ஒளி முதல்களிலிருந்து அதிக சக்தியை இம் மடிகணினிக்கு அளிக்கிறது.

சூரிய சக்தியல் இயங்கும், தொடும் விசைப்பலகை (Touch Keyboard ) கொண்ட இந்த மடி கணினியனது விரைவில் FPD International கண்கட்சியில் Japan இல் கட்சிப்படுத்தப்படும்.

Friday, May 20, 2011

GOOGLE இனை CALCULATOR  ஆக பயன்படுத்த முடியும்.

 பொதுவாக Google Search இஞ்சினில் ஏதாவது குறிச்சொற்களை தேடினால் அதனுடன் தொடர்புடைய இணையப்பக்கங்கள்,அவற்றுக்குரிய முக்கிய சொற்கள் ஆகியவை Google Search இல் தீர்வாக கிடைக்கும்.
         
                                                            ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். சர்ச் பாக்ஸில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். 100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம். அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன. 1 canadian dollar in sri lanka rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இலங்கை ரூபாய் மதிப்பு தரப்படும்.

சுவிற்ஷர்லாந்தின் SOLAR PLANE

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிற்ஷர்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு பிரான்ஸ், LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.


200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது.    இதில் பொருத்தப்பட்டுள்ள    சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியை கொண்டு இந்த விமானம் 26 மணி நேரம் பறக்கும் வல்லமை கொண்டது.   

இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50KM ஆக காணப்படுகின்ற போதிலும் இதனது வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த விமானம் சுவிற்ஷர்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

ஆயுட்காலம் வரை ஒரே தொடர்பெண்ணை பேண Google Voice

மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).  உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது.

ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் (GMail) போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.
செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக (transcript) செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.



இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போல கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.
  
உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் அழைப்பு மணி (Ring) அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால்  காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் (Setup) செய்து கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு தொலைபேசி நிறுவனங்களும் வெவ்வேறு விதமான சலுகைகளுடன் சிறப்பான சேவையினை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கென நிரந்தர தொடர்பு எண் ஒன்றை பேணுவது என்பது இயலாத காரியம். இதற்கும்  கூகிள் வாய்ஸ் எண் ஒரு தீர்வாக அமையுகிறது.


நீங்கள் உங்கள் ஆயுட்காலம் வரைக்கும் நிரந்தர தொடர்புஎண்ணாக கூகிள் வாய்ஸ் எண்ணை வைத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் தொலைபேசி எண்களை மற்றும் போது அவற்றை கூகிள் வாய்சில் மாற்றினால் போதுமானது. உங்கள் கூகிள் வாய்ஸ் எண்ணுக்கு அழைக்கும் அழைப்புகள் நீங்கள் கொடுத்துள்ள புதிய தொலை பேசி எண்ணுக்கு தானாக மாற்றி விடப்படும்.

கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பெறவும் முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் (Online) சேமித்து கொள்ளவும் முடியும்.

உங்கள் தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr. Speed World. Please leave your message. I will call you later.' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்ற தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.


கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும்.

தற்சமயம் கூகிள் வாய்ஸ் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பு (Invite) மூலமாகவே நீங்கள் அதனை சோதித்து கொள்ள முடியும். அதுவும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூகிள் வாய்ஸ் (Google Voice) அழைப்பு (Invite) பெற கீழுள்ள சுட்டிக்கு செல்லவும். 


கண்களால் கட்டுப்படுத்தும் மடிக்கணினி

உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விடீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம்.

அதாவது உங்கள் கண்களையே அதற்கு உபயோகப்படுத்துங்கள். உங்கள் கண்களை பயன்படுத்தி கணினியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அப்பியசமகவே அனைகிறது என்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபடுகளையும் இது குறைக்கிறது. அத்துடன் கணினியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.

Tobbi Technology நிறுவனம் இந்த கண்களால் கட்டுப்படுதும் உலகின் முதலாவது மடிக்கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இது இந் நிறுவனத்துடனான உருவனது. இது மார்ச் 1-5 வரை ஹனோவரில் நடை பெற்ற நிகழ்வில் கட்சிப்படுத்தப்பட்டது. இம் மடிக்க்ணினி ஒரு கணினியை கட்டுப்படுத்துவதற்கன அதிக பயன் விளைவான வழியை கொண்டுவருவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த வழியில் பயன்பட்டாளார்கள் கணினித்திரையில் ஒரு குறியீட்டை அல்லது கருவியை நோக்கியவுடன் முன்னையை விட அதிக தகவல் கட்சிப்படுத்தப்படும். அத்துடன் நீங்கள் படங்கள் அல்லது நிலவரை படங்களை மாறு உருப்பெருக்கம் செய்து பார்வையிட முடியும். மேலும் நீங்கள் பார்க்கும் பகுதியின் மையப்பகுதிக்கு தன்னியக்கமாகவே போக முடியும். உங்கள் கண்கள் எங்கே பார்க்கின்றன என்று தெரிந்து கொள்ளும் இயலுமையும் கணினிக்கு இருக்கும். இதன் பயனாக கண்கள் திரையைப்பார்க்காத வேளையில் கனிணியின் திரையை மங்கச்செய்யவும் முடியும். 
தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை, இயக்கும் நபரின்  கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD