Monday, May 09, 2011

கணிதம் கற்க ஒரு இலகுவான சிறந்த மென்பொருள்: MS Mathematics 4.0

கணிதம் , பௌதிகவியல்,இரசாயனவியல் போன்ற பல கணிப்பீடு சம்மந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு linux இயங்கு தளத்திற்கு ஏராளமான இலவச மென் பொருட்கள் உள்ளன. அதற்கு நிகராக தற்போது Microsoft நிறுவனமும் தனது  புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது. Mathematics 4.0 என்பதே அந்த மென்பொருளின் பெயராகும்.நீங்கள் இதை உபயோகப்படுத்தினால் நீங்களே ஒரு கணித ஆசானுக்கும் ஆசானாக மாறி விடலாம்.அதாவது இந்த மென்பொருளினைப் பயன்படுத்தி அனைத்து வகையான 2D,3D கணித சமன்பாடுகள், பௌதிகவியல் சமன்பாடுகள்,இரசாயனவியல் சமன்பாடுகள் ,வரைபாக்கல்கள் போன்றவற்றை மிகவும் எளிதாக செய்ய முடிகின்றது.இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கழைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூட இதனால் பயனடைய முடியும். புதியவர்கள் மற்றும் சந்தேகம் உள்ளவர்களுக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இதன் சிறப்பியல்பாகும். Algebra முதல் Trigonometry வரை ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் பயன்பாடாக Microsoft Word மற்றும் one note இற்கான நீட்சியாகவும் (Add-on) இந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாம்.

எந்த வகை வீடியோவையும் பார்த்து மகிழ புதியதொரு PLAYER

போலந்து நகரில் இருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  ALL PLAYER. எந்தவொரு வீடியோவாக இருந்தாலும் இதில் இயக்கலாம்.திரைப்படத்துக்கான சரியன சப் ரைட்டிலை தானாகவே இணையத்தளத்திலிருந்து தரவிறக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.கணினியில் திரைப்படங்களை கண்டு மகிழும் போது அதனுடன் சேர்த்து சப் ரைட்டிலையும் கண்டு மகிழ விரும்புகின்றீர்களா ? அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவும்.
அது மட்டுமல்ல you tube இல் இருந்து வீடியோவை உங்கள் கணினியில் இறக்கி பார்த்து மகிழ விரும்புகிறீர்களா ? அதற்கும் இந்த software உதவுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் இது இயங்க கூடியது. இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் திரைப்படத்தில் சப் ரைட்டிலுக்கான ஒலி வடிவை உச்சரிக்கும் ஆற்றல் கூட இதற்கு உண்டு.இந்த software ஐ உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து மகிழுங்கள்.பிடித்திருந்தால் comments போடுங்கள்.


Tooth Brush ஐ எப்படி தயாரிக்கிறார்கள்

"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" என்பது போல ஆதிகால மனிதன் ஆலம் பால்,வேப்பங் குச்சி போன்றவற்றால் பல் துலக்கி வந்தான். அந்த காலம் எல்லாம் மாறி விட்டது.வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகிலே நாம் அனைவரும் பல் துலக்குவதற்கு ஆலம் பால் வேப்பங்குச்சி எல்லாம் பயன்படுத்துவதில்லை.இன்று உலகளாவிய ரீதியில் அனைவரும் பயன்படுத்துவது Tooth Brush ஏயாகும்.ஆனால் எம்மில் அனேகமானவர்களுக்கு Tooth Brush எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்று தெரியாது. அக்காட்சியை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?

உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது. 
  • இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.   
  • இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும். 
  • ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். 
  • அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற இரண்டு பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர். 
  • இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
  • இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும் இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால் செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.


  • இந்த தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
  • இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து கொள்ளலாம். 
  • இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD