Tuesday, May 17, 2011

சாதனங்கள் சிலவற்றிற்கு பெயர் வந்த கதை.


தொழில் நுட்பச் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைப் பற்றி அறிவோம். 

1. பென்டியம் (Pentium): i 286, i386 மற்றும் i 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு i 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல்(Intel) நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம்  (Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் "Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.



2. வாக்மேன் (Walkman): இப்போத வாக்மேன் (Walkman) என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் (Walkman) உருவாகிவிட்டது.

வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் (Walkman) என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன் (Walkman). அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout) என்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல்(Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் (Walkman) என்ற பெயரே நிலைத்தது.



3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்.பி3 பிளேயர் (mp3 Player) ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் (mp3 Player) ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு "Pod" மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் (iPod)என பெயர் சூட்டினார்கள்.




4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம், தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் (Keys) ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி (BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.




5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.




6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும்(Mozilla) தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird)  என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ்(Firefox) எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.




7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT  எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.





8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐ.பி.எம்(IBM) நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் (Laptop) கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐ.பி.எம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் (Thinkpad) என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் ஐ.பி.எம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் (Thinkpad) மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க்பேட் (Thinkpad) என்ற பெயர் ஊன்றியது.





9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும். இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.



10. அமேஷன் கிண்டில் (Amazon Kindle): இ–புக் (e-Book) என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஷன் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle  என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

 மீடியா பிளேயரில் அனைத்து வகையான வீடியோக்களையும் பார்க்க

நாம் விண்டோஸ் இயங்குதளம்  (Operating System)  தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.இந்த மீடியா பிளேயர் இல்லாத கணினியே இல்லை எனலாம்.

இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது. ஆகையால் நீங்கள் அந்த வீடியோக்களைப் பார்ப்பதற்காக வெவ்வேறு பிளேயர்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வீர்கள்.ஆனால் இந்த மீடியா பிளேயரிலேயே அனைத்து வைகையான வீடியோக்களையும் எப்படி பார்ப்பது என்று ஒரு நாள் கூட சிந்தித்ததில்லை.(நான் கூட இவ்வளவு நாளும் சிந்திக்கவில்லை)
        
இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம்  மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை மீடியா பிளேயரில் காண முடியும்.

இந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.

Monday, May 16, 2011

சினிமாப்பாடல்களை GOOGLE இல் கேட்டு மகிழுங்கள்.

http://thozhilnutpam.files.wordpress.com/2010/10/google-music-logo.jpgந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com.Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZLSneVvPQVXi76aqo1leulDbykcujvrtxfXvCQ5A2uP5I54gPlGVAPebh7NGPLhIXfUd3diN514c4byTCgnFl0y0adcsKkNaSXiTGjHS5MRmCGig5nLKKuc8zR7V9HI3JFdT0XL8MPhik/s576/Untitled-3%20copy.jpg70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இன்று வரை வந்த திரைப்படங்களின் பாடல்கள் அனைத்தும் உள்ளது.
இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுள் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEGVq0msdbhgjKIpMJHQs2TZPMi6oSiuDcpFawQpLUnA6AtgPJ8zuH4EuiPrmACZTT5uYqEl3vwo8hf1sczojMWkKVDsNiyB9HWxArmCCS5mtbevwRVM0H5Ctd3xd3LA0X7TSjp4zNjLnB/

இணையத்தள முகவரி :- http://www.google.co.in/music/

மார்க் ஷூக்கர் பேர்க் இன் Hack செய்யப்பட்ட Facebook Account.

நம்மில் பலருக்கு Facebook இல் Account .ருக்கும். ஏன் Facebook ஐ அறியாதவர்கள் உலகில் இல்லை என்றே சொல்ல முடியும். ஆனால் அதனை யாருக்காவது தெரியுமா? அவர்தான் இந்த

மார்க் ஷூக்கர் பேர்க்

இவரது பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவு செய்தது போல செய்தி ஒன்று இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.






Let the hacking begin: If facebook needs money, instead of going to the banks, why doesn’t Facebook let its users invest in Facebook in a social way? Why not transform Facebook into a ‘social business’ the way Nobel Price winner Muhammad Yunus described it? http://bit.ly/fs6rT3 What do you think? #hackercup2011

அதாவது பேஸ்புக்கிற்கு பணம் தேவையென்றால் வங்கிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை, ஏன் பேஸ்புக் அதன் பாவனையாளர்களை அதில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சமூக வியாபரம் போன்றதாக மாற்றக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹெக் செய்யப்பட்டு குறிப்பு பதிவுசெய்யப்பட்ட சில நேரத்திலேயே இக்குறிப்பு அகற்றப்பட்டமையானது இது ஹெக் செய்யப்பட்டமையை உறுதிசெய்வதாக இணையத்தளங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும் அவ்வாறு அகற்றப்படுவதற்கு முன்னரே பலர் இப்பதிவினை வாசித்திருந்ததுடன் தங்கள் விமர்சனங்களையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

USB DRIVEஇல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட !


உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.
                        அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.
 

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD