Wednesday, May 18, 2011

மொபைல் போனில் தமிழ் தளங்களை பார்த்து மகிழ.

மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

 பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.



ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும். 

உங்கள் இணயத்தின் வேகத்தை கணக்கிடலாம்.


ப்ரோட்பேண்ட் (Boad Band) இன்டர்நெட் இணைப்பு (Internet Connection) தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition- களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்றாவது எமது இன்டர்நெட் இணைப்பின் (Internet Connection) வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கையில் ஒரு இணயத்தளம் இச் சேவையை வழங்குகிறது.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் (Internet Connection) வேகத்தை அறிய  www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் ப்ரோட்பேன்ட் (Boad Band) இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் (Internet) டவுண்லோட் ஸ்பீடையும் (Downloadspeed)அது அளந்துகாட்டும். அதிலே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். கீழே உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு (Internet Connection) தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும்.

  • தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்.


  • உங்கள்  இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்.












அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட்(Boad Band) மோடம் (Modem) தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் (Modem) இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை. அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.
 

உங்கள் மெயில் ஐடியில் LOGO களை உருவாக்க

இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.

மேலே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.
  • அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும். 
  • இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
  • அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.
  • மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
பிளாக்கில் உபயோகிக்கும் முறை 
  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • பின்பு Design- Add a Gadget – Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
---------------------------------------------------------------------------------
<a href=”mailto:YOUR EMAIL ID“><img src=”EMAIL LOGO URL” /></a>
--------------------------------------------------------------------------------
  • YOUR EMAIL ID – உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
  • EMAIL LOGO URL – என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும்.

 Start பட்டனை நகர்த்தி பாருங்களேன் !

Start Button கணினியில் ஒரே இடத்தில் இருப்பதை தான் நாம் பார்த்து இருப்போம்.அந்த Start Button வேறு இடத்திற்க்கு மாற்ற முடியுமா? வேரு இடத்திற்க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் அல்லவ. ஆம் இந்த மென்பொருள் Start Buttonனை வேறு இடத்திற்க்கு ஓட வைக்கிறது. ஓடிகொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து இதை நிறுத்திகொள்ளலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள். பின்பு Speed & Steps என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும். Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.


தரவிறக்க சுட்டியை கிளிக் செய்ததும் வரும் விண்டோவில் free downloading என்பதை கொடுக்கவும். அவ்வளவு தான் 60 செக்கன்களின் பின் Download file என்று வரும். அதை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளலாம். 

Tuesday, May 17, 2011

சாதனங்கள் சிலவற்றிற்கு பெயர் வந்த கதை.


தொழில் நுட்பச் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைப் பற்றி அறிவோம். 

1. பென்டியம் (Pentium): i 286, i386 மற்றும் i 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு i 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல்(Intel) நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம்  (Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் "Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.



2. வாக்மேன் (Walkman): இப்போது வாக்மேன் (Walkman) என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் (Walkman) உருவாகிவிட்டது.

வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் (Walkman) என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன் (Walkman). அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout) என்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல்(Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் (Walkman) என்ற பெயரே நிலைத்தது.



3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்.பி3 பிளேயர் (mp3 Player) ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் (mp3 Player) ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு "Pod" மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் (iPod)என பெயர் சூட்டினார்கள்.




4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம், தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் (Keys) ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி (BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.




5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.




6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும்(Mozilla) தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird)  என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ்(Firefox) எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.




7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT  எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.





8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐ.பி.எம்(IBM) நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் (Laptop) கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐ.பி.எம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் (Thinkpad) என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் ஐ.பி.எம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் (Thinkpad) மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க்பேட் (Thinkpad) என்ற பெயர் ஊன்றியது.





9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும். இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.



10. அமேஷன் கிண்டில் (Amazon Kindle): இ–புக் (e-Book) என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஷன் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle  என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD