Wednesday, May 11, 2011

 நீங்கள் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு என்பவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது

விடுமுறை தொடங்கியாச்சு வெளிமாநிலம் முதல் வெளிநாடு வரை
செல்ல விரும்பும் அனைவருக்கும் பயணத் தகவல்களையும் அதற்கு
ஆகும் செலவையும் நேரத்தையும் துல்லியமாக கொடுத்து நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.rome2rio.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலக அளவில் எந்த நாட்டில் இருந்தும்
எந்த நாட்டிற்கும், ஒரே நாட்டில் இருந்து வெவ்வெறு மாநிலங்களுக்கும்
செல்வதற்கான மேப் பேருந்தில் செல்வது முதல் இரயில் விமானம்
என அத்தனையும் பட்டியலிட்டு காட்டுகிறது இதில் வலது பக்கம்
இருப்பதில் பேருந்து , இரயில் , விமானம் என எதில் நாம் செல்ல
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால் போதும், எத்தனை கீ.மீ என்பது
முதல் பயணச்செலவு வரை அத்தனையும் காட்டும் கூடவே வலது
பக்கம் கூகிள் மேப் உதவியுடன் மேப் காட்டப்படும். கண்டிப்பாக
இந்தப்பதிவு சுற்றுலா செல்பவர்களுக்கும் வேலை நிமிர்த்தமாக
வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



உங்கள் Desktop இனை 3D ஆகக் கண்டு மகிழுங்கள்.

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்.
இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில்
ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும் .
       
விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம்மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக்
கொள்ளலாம். மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D
Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

உங்கள் IP முகவரியினை உடனடியாக புதுப்பிப்பதுக் கொள்ளுங்கள்.

இது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message  ஒன்று வந்து நிற்கும். நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள். இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP)  முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.
வழிமுறைகள்
strat button  இல் க்ளிக் செய்து Run  என்பதை தெரிவு செய்யுங்கள்.
Type “cmd” in the box and click on “OK.”  விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system  இனை ஒத்திருக்கும்.
Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.
Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.
Type “Exit” and press “Enter”  பின்னர் உங்கள் விண்டோ close  செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.
ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்
உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கொண்ட வழிமுறைகள் தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router  இனை unplug  செய்து திரும்ப இணைத்துவிட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) “ipconfig /all” கட்டளை அனைத்து IP  முகவரியினையும் காண்பிக்கும்.

 உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு?


 உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?

கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.

நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)



 நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)


(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..



இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.



http://remote.12dt.com/lookup.php


http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD