Saturday, May 14, 2011

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்

உங்கள் கணினியில் புதிய DRIVE ஒன்றை உருவாக்குவது எப்படி ?

உங்கள் கணனியில் உள்ள Hard Drive வை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து இருபீர்கள், இருப்பினும் உங்களுக்கு மேலதிக ஒரு driver தேவைப்படுகிறது தனிப்பட்ட files களை சேமிப்பதற்கு, கவலையை விடுங்கள் மேலதிக எந்த ஒரு மென்பொருளும் நிருவாமல் ஒரு புதிய dirve உங்களை கணனியில் கொண்டுவர கிழே உள்ள படிமுறையை செயல்படுத்துங்கள்.



GO TO "C" DRIVE

புதிய Folder ஒன்றை திறந்து simplex என rename செய்துகொள்ளவும். (நீங்கள் விரும்பிய பெயரை கொடுக்கலாம் )

Start ---> Accessories ---> Command Prompt - open செய்யவும்





கிழே உள்ள code ஐ commad prompt இல் type செய்து enter செய்யவும்
subst z: c:\simplex

நீங்கள் newfolder இல் கொடுத்த பெயரை இங்கே கொடுக்கவும்


பின்பு mycomputer சென்று பாருங்கள் புதிதாக ஒரு driver காணப்படும்




புதிய driver ஐ அகற்ற இந்த code ஐ type செய்து enter செய்யவும்
subst z: /d




இப்போது புதிய drive கம்ப்யூட்டர் இல் இருக்காது.

வைரஸ் தாக்கிய பென்ரைவை திறப்பது எப்படி ?

உங்களுடைய பென்ரைவை நீங்கள் நண்பர்களுக்னுகு கொடுத்திருக்கலாம். அவர்கள் பாவித்து விட்டு தரும் போது  சில வேளைகளில் அதில் வைரஸ் இருக்கும்.இவ்வாறு வைரஸ் தாக்கிய பென்ரைவை நீங்கள் உங்கள் கணினியில் Open செய்யும் போது உங்களுடைய கணினிக்கும் அந்த வைரஸ் தாக்க இடம் உண்டு.சில வேளைகளில் உங்களுக்கு முக்கியமான தகவல்கள் அந்த பென்ரைவில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் open செய்தால் என்னுடைய கணினியில் வைரஸ் வந்துவிடுமே என்ற பயத்தினால் உங்ளுக்கு தேவையான தகவல்களை இழக்க நேரிடும்.
                                                       ஆனால் இந்த முறையின் மூலம் உங்கள் கணியில் உங்களுடைய பென் ரைவை ஓப்பன் செய்தால் வைரஸ் கணினிக்கு வர இடமில்லை.அதற்கு பின்வரும் முறையை கையாளுங்கள்.

  • Start மெனுவிலுள்ள Run எனும் பகுதிக்கு செல்லுங்கள்.(விண்டோஸ் 7 ஆகவிருப்பின் Start -->All programs --> Accessories --> Run )
  • இப்பொழுது வந்திருக்கும் Run பெட்டியில் உங்கள் பென்ரைவானது எந்த டிவைசில் உள்ளதோ அதை ரைப் பண்ணி Ok பட்டனை அழுத்தவும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1HxWCrTL2Nz2dx71XQOJq9iwtKGt8m2l8lvTSqUJoBoDLN1q9_oMf6MNPKJyHqLzBwMraMBlrz0aTRcLTPv3PxuxQ-zHJjMXz6x7l1zoU3UpXPNwRP31xJiPWsnEV7FYtYyJPP3ZHmj35/

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்


 altவிண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.
1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்dகும் டேப்களில்Reay Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.

பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக GOOGLE என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.

விண்டோஸ் Boot skin திரையை மாற்றுவது எப்படி?


 Computer ஜ On செய்யும்போது வரும் விண்டோஸ் Logo ஜ மாற்றம் செய்வது எப்படி?




இதை Boot skin என்ற மென்பொருள் மூலம் மிகவும் இலகுவாக செய்யலாம்.இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள். பின்பு இம் மென்பொருளை Open செய்து அதிலுள்ள உங்களுக்கு விருப்பமான படத்தை தெரிவுசெய்து Apply செய்வதன் மூலம் பழைய விண்டோஸ் திரையை மாற்றலாம்.ஒருவேளை உங்களுக்கு இங்கிருக்கும் படங்கள் பிடிக்கவில்லை என்றால் Brows bootskin Library என்பதன் மூலம் வலைப்பக்கத்திலிருந்து மேலதிகமாக படங்களை Download செய்து பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 7ல் போல்டர் ஐகான் மற்றும் நிறத்தை மாற்றம் செய்ய Folderico


அதிகமாக உள்ள கோப்புகள் அனைதையும் ஒரே போப்பறையில் (Folder) வைத்திருப்போம் சாதாரணமாக போப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான போப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் போப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது. கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில் போப்பறையில் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள் உருவாக்கும் போப்பறைகளுக்கு தனி கலர் மற்றும் அழகிய ஐகானை உருவாக்க முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பறையை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்யது கொண்டு, Select icon என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பபடி ஐகானை மாற்றம் செய்து கொள்ள முடியும்.


இல்லையெனில் கோப்பறையின் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் வரிசையில் Folderico என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் உங்கள் விருப்பபடி கோப்பறையை மாற்றம் செய்து கொள்ள முடியும்.


இப்படியும் கோப்பறையில் நிறத்தையும், உருவ படத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

அனைத்து மென்பொருட்களையும் Crack செய்ய

வர்த்தக நோக்கம் கொண்ட பரிட்சார்த்த(Trial) மென்பொருட்களை கிரக்கிங்(Cracking) செய்வதன் மூலம் நாம் அதன் முழு பயன்பாட்டினையும் பெறலாம். இன்று அதிகமாக பெரும்பாலானோர்  வின்டோஸ் தொடக்கம் அடோப் தயாரிப்புக்கள் வரை கிரக்கிங் செய்யப்பட்டவற்றையே இலவசமாக உபயோகிக்கின்றனர்.
 இதற்கான மென்பொருட்கள் hiew32,w32dsm என்பனவாகும். இவை கிடைக்கப் பெறுவது அரிது.ஆனால் இந்த மென்பொருட்கள் இருந்தால் செய்வது இலகு.

(இந்த மென்பொருட்களை தரவிறக்குவதற்கான Link விரைவில் இதனுடன் இணைக்கப்படும்.)

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD