Thursday, May 19, 2011

கூகிள் தேடலில் வீடியோவின் preview இனை பார்க்கலாம்.


கூகுள். (Google). இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.


இந்த வசதி மூலம் நாம் அந்த வீடியோவை சுமார் 5 நொடிகள் வரை கூகுளில் காணலாம். இதில் நமக்கு தேவையான வீடியோவை மட்டும் நாம் க்ளிக் செய்தால் நேரடியாக அந்த வீடியோ நமக்கு ஓபன் ஆகும். இந்த முறையில் யுடியுப் வீடியோக்களை மட்டுமே காணமுடிகிறது. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களின் preview தெரிவதில்லை.
  • முதலில் கூகுள் தளத்திற்கு சென்று ஏதேனும் வீடியோ பைலை தேடுங்கள்.
  • முடிவு வந்ததும் அந்த வீடியோவுக்கு நேராக உள்ள ஒரு லென்ஸ் போன்ற ஐகானை(Icon) க்ளிக் (Click) செய்தால் அந்த வீடியோவுக்கு சம்பந்தமான அணைத்து வீடியோக்களும் வரும்.
  • அது தானாகவே ஒவ்வொரு வீடியோவாக ஓடும் அதில் உங்களுக்கு தேவையான வீடியோ மீது க்ளிக் (Click) செய்து அந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள்.
  • இது போன்று வரும் Preview வீடியோக்களில் ஆடியோவை கூட நாம் கேட்க முடியும்.

 உங்கள் Desktop இற்கு Effect  க்களை எப்படி கொண்டு வருவது ?

டெக்ஸ்டாப்பில் விதவிதமாக 22  தோற்றங்கள்(Effect) எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். இது மிகவும் சின்ன சாப்ட்வேர்..32 கே.பி.தான். நீங்கள் டெக்ஸ்டாப்பில் இந்த வசதிகளை பெற கீழே செய்யவும் ( டவுன்லோட் பட்டன் இறுதியில் உள்ளது ). உங்களுக்கு சின்ன ஐ-கான் வரும். அதை கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓவ்வோரு Effect(எபக்ட்) டையும் நீங்கள் கிளிக் செய்து கீழே உள்ள Play(பிளேவை) அழுத்தினால் உங்கள் டெக்ஸ்டாப் விதவிதமாக மாறுவதை காணலாம்.சில மாறுதல்கள் கீழே:-
மற்றும் ஓரு மாறுதல்:-
அடுத்தது:-
அதற்கடுத்தது:-
மற்றும் ஒரு எபக்ட்:-
உபயோகித்துப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்

பின்லேடனாக மாறும் ரீ சைக்கிள் பின் (Recycle Bin)


ரீ சைக்கிள்பின்னுக்கு விதவிதமான பெயர்களை வைத்தவர்கள் இப்போது ரீ-சைக்கிள்பின்னுக்கு பின்லேடன் பெயரையும் -புகைப்படத்தையும் இணைத்துள்ளார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுண்லோட் பட்டனை  கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளுங்கள். பின் அதனை கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள கட்டத்தில் டிக் மார்க்செய்து பின்னர் அப்ளை செய்யுங்கள். இப்போது உங்களுடைய ரீ-சைக்கள்பின்னானது பின்லேடன் படத்துடன் வந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏதாவது ஒரு பைலை நீங்கள் டெலிட்செய்ததும் உங்களுக்கு பின்லேடன் படத்துடன செய்துவரும்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னில் நாம் டெலிட் செய்தபைல்இருக்கும். பின்லேடன் முகமும் மாறிஉள்ளதை காணுங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னை ஓப்பன் செய்து அதில் உள்ள பைலை டிலிட் செய்யுங்கள்.குண்டு வெடிக்கும் சத்தத்துடன் உங்கள் பைல் டெலிட் ஆவதை காண்பீர்கள்.குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டு பயந்துவிடாதீர்கள். பயன்படுத்திப்பாரு்ஙகள். கருததுக்களை கூறுங்கள்.


 Start மெனுவை மேலும் மெருகூட்ட

உங்களுடைய Desktop இனை மிகவும் அழகாக வைத்திருக்க விரும்புகிறீர்களா ? உங்கள் கணினியை எப்பொழுதும் மற்றவர்களினுடைய கணினியை விட வித்தியாசமாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.ஆனால் அப்படி வித்தியாசமாக வைத்திருப்பதற்கு உங்களிடம் பெரிதாக ஒன்றும் இருக்காது. நானும் என்னுடைய கணினியை மற்றவர்களை விட வித்தியாசமாகவே வைத்திருக்க விரும்புகின்றேன். என்னுடைய கணினியில் எடுத்த சில ஸ்கிறீன் சொட்டுக்களை பாருங்கள்.


இவ்வாறு உங்கள் கணினியும் இருந்தால் எப்பிடி இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா ? கீழே ஒரு மென்பொருள் சுட்டி ஒன்று கொடுத்துள்ளேன். அதனை கிளிக் செய்து அம் மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள். அதன் பின் தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் நிறுவிய பின் அம் மென்பொருளுக்கான ஒரு ஐ-கான் (Icon) தானாகவே டாஸ்க்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதன் பின் நீங்கள் டாஸ்க்பாரில் உள்ள அந்த ஐ-கான் (Icon) மீது வலது கிளிக் செய்து Change skin என்பதனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு வந்திருக்கும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்து உங்கள் கணினியை அழகூட்டுங்கள். அதிலுள்ள ஒன்றும் பிடிக்கவில்லையென்றால் அதிலே கடைசியாகவுள்ள Get more skin என்பதை கிளிக் செய்து அங்கு உங்களுக்கு பிடித்தவற்றை தரவிறக்கி பயன்படுத்துங்கள்.

 Start மெனுவில் உங்களுக்கு பிடித்த பெயரை மாற்ற

Start மெனுவில் நமக்கு விருப்பமான பெயரை கொண்டு வந்தால் எப்படி இருக்கும். ஆம் அப்படி கொண்டு வர முடியும். அதற்கு ஒரு மென்பொருள் ஒன்று உள்ளது. ஆனால் இம்மென்பொருள் வெறும் 357 KB மட்டுமே. அம்மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்கச்சுட்டியில் கிளிக் செய்து உங்கள் கணினியில் தரவிறக்கி கொள்ளுங்கள்.  தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவியதும் அதற்குரிய ஒரு ஐ-கான்( Icon) டாஸ்க் பாரில் வந்து அமர்ந்து கொள்ளும். அதிலுள்ள Show என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ வரும். அதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்யுங்கள்.நான் என்னுடைய தளத்தின் பெயரை சுருக்கமாக தட்டச்சு செய்துள்ளேன்.
இவ்வாறு உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து Change Text என்பதை கொடுக்கவும். அவ்வளவு தான் உங்களுக்கு கீழ் கண்டவாறு மாறியிருப்பதை காண்பீர்கள்.


http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD