Tuesday, May 10, 2011

 எந்தவொரு இணையத்தள IP ஐயும் உடனே தெரிந்து கொள்ள

எந்த இணையத்தளம் எந்த IP முகவரியில் இருந்து செய்யப்படுகின்றது என்பதனை மிகவும் சுலபமாக கண்டு பிடிக்க ஒரு வழி உள்ளது. என்னடா இது!  இப்பிடி என்டால் அனைவரும் எந்தெந்த இணையத்தளம் எந்த IP முகவரியில் இருந்து உருவாக்கப்படுகின்றது என்று அறிந்து விடுவார்களே? சிலருக்கு பயம் வந்துவிடும்.(உங்களுக்கே விளங்கியிருக்கும்). இதற்காக நீங்கள் மென்பொருள் ஒன்றும் தரவிறக்க தேவையில்லை.அப்படி என்றால் எப்படித்தான் IP முகவரியினை கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்.
  • முதலில் உங்கள் கணினியை open செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து start மெனுவில் உள்ள run க்குச்சென்று CMD என டைப் செய்து ஓகே கொடுங்கள்.(அல்லது Start --->All programs--->Accessories--->Command Prompt இற்கு செல்லுங்கள்.)
  • அவ்வாறு செய்ய வரும் CMD Prompt இல் ping என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு நீங்கள் IP முகவரி பார்க்க வேண்டிய தள முகவரியை டைப் செய்து Enter செய்யவும்.
உதாரணமாக ping www.facebook.com
சில பிரமாண்டமான தளங்கள் அடிக்கடி தங்கள் IP இனை மாற்றிக்கொள்ளும்.
ஏன் சில வேளைகளில் ஒரு கணத்தில் கூட IP எண் மாறும்.

நினைத்த வர்ணத்தில் எழுதும் புதுவித பேனா

ஜின்ஸன் பார்க்(Jinsun Park ) என்ற கொரிய நாட்டு நிறுவனம் கலர் பிக்கெர் (Color Picker) எனும் ஒரு பேனாவைக் கண்டுபிடித்துள்ளது. உங்களுக்கு என்ன வண்ணம் வேண்டுமோ அந்த வண்ணம் உள்ள எதாவது ஒரு பொருளின் அருகில் இந்த பேனாவை வைத்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். அப்போது பேனாவில் உள்ள சென்சார் மூலம் அந்த வண்ணம் அறியப்பட்டு, RGB காட்ரிட்ஜ் தேவையான வண்ண இங்க் (Ink) ஐ கலந்து கொள்கிறது. பின் நீங்கள் இந்த பேனாவை உபயோகப் படுத்தும்போது ஸ்கேன் செய்த வண்ணத்தில் எழுதவோ, வரையவோ முடியும்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
அறிவியல் தொழில் நுட்பம் எங்கோ வளர்ந்து கொண்டு போகிறது!!










லோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக

லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.
கீழே உள்ள சுட்டியில் Click செய்து மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.
இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.


எட்டு மென்பொருட்களின் வேலையை ஒரே மென் பொருளில் செய்ய

வீடியோ, ஆடியோ மற்றும் இமெஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்யும் ஏகப்பட்ட மென் பொருட்களை இணைய தளத்தில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் .அதுமட்டுமல்லாது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு Software என்று ஏகப்பட்ட Software களை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்திருப்பீர்கள்.இப்படியான பல பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவே இந்த Software உருவாக்கப்பட்டது. இந்த Software ஆனது எட்டு Software களின் பணியை செய்கின்றது. எனவே இது ஒரு அருமையான மென்பொருள் ஆகும். அந்த மென்பொருளினால் கிடைக்கும் பயன்களாவன.
  • உங்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களை இணைத்து (3டி) 3D புகைப்படம் உருவாக்க முடியும்.
  • You tube கோப்புகளை தரவிற்க்க முடியும்.
  • தரவிறக்கிய கோப்புக்களை எம்பி3 யாக மாற்றமுடியும்.
  • டிவிடியாக மாற்ற முடியும்.
  • You tube கோப்புகளை நேரடியாக அப்லோடும் செய்ய முடியும்.
  • 3D Video Format (3டி வகை வீடியோ) கோப்புகளும் உருவாக்க முடியும்.
இவ்வாறான எட்டு மென்பொருட்களின் வேலையை இந்த மென்பொருள் செய்ய கூடியது.
இந்த அருமையான மென்பொருளினை தரவிறக்கம் செய்து பாவித்து பாருங்கள்.
அதன் பின் நீங்களாகவே எட்டு மென்பொருட்களையும் Uninstall செய்து விட்டு அதற்கு பதிலாக இந்த மென்பொருளினை நிறுவி பாவிக்க தொடங்குவீர்கள்.

எப்படி Skype இல் தொடர்பாடல் விபரங்களை அழிப்பது?

நீங்கள் தொடர்ச்சியாக Skype பயன்படுத்துபவரா ? நீங்கள் பயன்படுத்துகின்ற Skype இல் தொடர்பாடல் விபரங்கள் சேமிக்கப்படுவதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மேற்கொள்கின்ற அழைப்புக்கள் மட்டுமன்றி நீங்கள் அனுப்பும் செய்திகள் (IM), கோப்புக்கள் (Files), வரை அனைத்து செயற்பாடுகளும் பதிவாகியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
                                                       அப்படி சேமிக்கப்படும் விபரங்களை அகற்றி இனிமேல் உங்களது விபரங்கள் சேமிக்கப்படாமல் இருக்கவும் அல்லது நீங்கள் விரும்பிய காலப்பகுதியில் மட்டும்  விபரங்கள் இருப்பதற்கும் Skype இல் வழி உண்டு.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
  1. முதலில் Skype இனை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
  2. அடுத்து உங்கள் Skype name, Password என்பவற்றை கொடுத்து உங்கள் Account இனை Sign in செய்து கொள்ளுங்கள்.(Skype Account இல்லாதவர்கள் புதிதாக ஒரு Account ஐ திறந்து கொள்ளுங்கள்.)
  3. பின் உங்கள் Skype window இல் Manu bar  இல் உள்ள Tools எனும் tab இனுள் உள்ள Option எனும் பகுதிக்குச் செல்லுங்கள். https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinAJT8opVnI7mrY73gfTBuVOL1SU8HHUgXcauqIOIRFeNpgmQ1_rvTNhCWJ7AE3x8GDV9S594BSgc5KUtU10M71UHH6NzYn8kvbCrdG_1SO3F_-iIoXRIqgL8d1q68gkPnFykSz2k_PDBI/
  4. அதில் இடது பக்கமுள்ள Privacy settings க்குச்செல்லுங்கள். 
  5. அந்தப்பகுதியிலே காணப்படும் Keep history for என்பதை கண்டுபிடியுங்கள்.
  6. அதிலே உள்ள பகுதியில் உங்களுக்கு ஏற்றவாறு இனிவரும் காலங்களில் விபரங்களை சேமிப்பதா  இல்லையா அல்லது குறித்த கால விபரங்களை மட்டும் சேமிக்க வேண்டுமாயின் அதற்கான கால அளவு மாற்றத்தையும் செய்து கொள்ளலாம்.





















    7. "Clear history" என்பதை கொடுப்பதன் மூலம் உங்களது அனைத்து விபரங்களையும் அழித்து கொள்ள முடியும்.

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD