Tuesday, May 10, 2011

எப்படி Skype இல் தொடர்பாடல் விபரங்களை அழிப்பது?

நீங்கள் தொடர்ச்சியாக Skype பயன்படுத்துபவரா ? நீங்கள் பயன்படுத்துகின்ற Skype இல் தொடர்பாடல் விபரங்கள் சேமிக்கப்படுவதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மேற்கொள்கின்ற அழைப்புக்கள் மட்டுமன்றி நீங்கள் அனுப்பும் செய்திகள் (IM), கோப்புக்கள் (Files), வரை அனைத்து செயற்பாடுகளும் பதிவாகியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
                                                       அப்படி சேமிக்கப்படும் விபரங்களை அகற்றி இனிமேல் உங்களது விபரங்கள் சேமிக்கப்படாமல் இருக்கவும் அல்லது நீங்கள் விரும்பிய காலப்பகுதியில் மட்டும்  விபரங்கள் இருப்பதற்கும் Skype இல் வழி உண்டு.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
  1. முதலில் Skype இனை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
  2. அடுத்து உங்கள் Skype name, Password என்பவற்றை கொடுத்து உங்கள் Account இனை Sign in செய்து கொள்ளுங்கள்.(Skype Account இல்லாதவர்கள் புதிதாக ஒரு Account ஐ திறந்து கொள்ளுங்கள்.)
  3. பின் உங்கள் Skype window இல் Manu bar  இல் உள்ள Tools எனும் tab இனுள் உள்ள Option எனும் பகுதிக்குச் செல்லுங்கள். https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinAJT8opVnI7mrY73gfTBuVOL1SU8HHUgXcauqIOIRFeNpgmQ1_rvTNhCWJ7AE3x8GDV9S594BSgc5KUtU10M71UHH6NzYn8kvbCrdG_1SO3F_-iIoXRIqgL8d1q68gkPnFykSz2k_PDBI/
  4. அதில் இடது பக்கமுள்ள Privacy settings க்குச்செல்லுங்கள். 
  5. அந்தப்பகுதியிலே காணப்படும் Keep history for என்பதை கண்டுபிடியுங்கள்.
  6. அதிலே உள்ள பகுதியில் உங்களுக்கு ஏற்றவாறு இனிவரும் காலங்களில் விபரங்களை சேமிப்பதா  இல்லையா அல்லது குறித்த கால விபரங்களை மட்டும் சேமிக்க வேண்டுமாயின் அதற்கான கால அளவு மாற்றத்தையும் செய்து கொள்ளலாம்.





















    7. "Clear history" என்பதை கொடுப்பதன் மூலம் உங்களது அனைத்து விபரங்களையும் அழித்து கொள்ள முடியும்.

0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD