Monday, May 09, 2011

கணிதம் கற்க ஒரு இலகுவான சிறந்த மென்பொருள்: MS Mathematics 4.0

கணிதம் , பௌதிகவியல்,இரசாயனவியல் போன்ற பல கணிப்பீடு சம்மந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு linux இயங்கு தளத்திற்கு ஏராளமான இலவச மென் பொருட்கள் உள்ளன. அதற்கு நிகராக தற்போது Microsoft நிறுவனமும் தனது  புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது. Mathematics 4.0 என்பதே அந்த மென்பொருளின் பெயராகும்.நீங்கள் இதை உபயோகப்படுத்தினால் நீங்களே ஒரு கணித ஆசானுக்கும் ஆசானாக மாறி விடலாம்.அதாவது இந்த மென்பொருளினைப் பயன்படுத்தி அனைத்து வகையான 2D,3D கணித சமன்பாடுகள், பௌதிகவியல் சமன்பாடுகள்,இரசாயனவியல் சமன்பாடுகள் ,வரைபாக்கல்கள் போன்றவற்றை மிகவும் எளிதாக செய்ய முடிகின்றது.இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கழைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூட இதனால் பயனடைய முடியும். புதியவர்கள் மற்றும் சந்தேகம் உள்ளவர்களுக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இதன் சிறப்பியல்பாகும். Algebra முதல் Trigonometry வரை ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் பயன்பாடாக Microsoft Word மற்றும் one note இற்கான நீட்சியாகவும் (Add-on) இந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாம்.

0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD