Wednesday, May 18, 2011
மொபைல் போனில் தமிழ் தளங்களை பார்த்து மகிழ.
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
Posted by SPEED WORLD at 5:36:00 PM 0 comments
CATEGORIES: HOME
உங்கள் இணயத்தின் வேகத்தை கணக்கிடலாம்.
- தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்.
- உங்கள் இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்.
Posted by SPEED WORLD at 5:07:00 PM 0 comments
CATEGORIES: PC TRICKS
உங்கள் மெயில் ஐடியில் LOGO களை உருவாக்க
இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.
- அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும்.
- இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
- அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.
- மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
- இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்பு Design- Add a Gadget – Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
--------------------------------------------------------------------------------<a href=”mailto:YOUR EMAIL ID“><img src=”EMAIL LOGO URL” /></a>
- YOUR EMAIL ID – உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
- EMAIL LOGO URL – என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும்.
Posted by SPEED WORLD at 3:28:00 PM 0 comments
CATEGORIES: HOME
Start பட்டனை நகர்த்தி பாருங்களேன் !
Start Button கணினியில் ஒரே இடத்தில் இருப்பதை தான் நாம் பார்த்து இருப்போம்.அந்த Start Button வேறு இடத்திற்க்கு மாற்ற முடியுமா? வேரு இடத்திற்க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் அல்லவ. ஆம் இந்த மென்பொருள் Start Buttonனை வேறு இடத்திற்க்கு ஓட வைக்கிறது. ஓடிகொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து இதை நிறுத்திகொள்ளலாம்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள். பின்பு Speed & Steps என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும். Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.
Posted by SPEED WORLD at 8:00:00 AM 0 comments
CATEGORIES: PC TRICKS