Monday, May 09, 2011
கணிதம் கற்க ஒரு இலகுவான சிறந்த மென்பொருள்: MS Mathematics 4.0
Posted by SPEED WORLD at 9:51:00 PM 0 comments
CATEGORIES: HOME
எந்த வகை வீடியோவையும் பார்த்து மகிழ புதியதொரு PLAYER
போலந்து நகரில் இருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ALL PLAYER. எந்தவொரு வீடியோவாக இருந்தாலும் இதில் இயக்கலாம்.திரைப்படத்துக்கான சரியன சப் ரைட்டிலை தானாகவே இணையத்தளத்திலிருந்து தரவிறக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.கணினியில் திரைப்படங்களை கண்டு மகிழும் போது அதனுடன் சேர்த்து சப் ரைட்டிலையும் கண்டு மகிழ விரும்புகின்றீர்களா ? அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவும்.
அது மட்டுமல்ல you tube இல் இருந்து வீடியோவை உங்கள் கணினியில் இறக்கி பார்த்து மகிழ விரும்புகிறீர்களா ? அதற்கும் இந்த software உதவுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் இது இயங்க கூடியது. இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் திரைப்படத்தில் சப் ரைட்டிலுக்கான ஒலி வடிவை உச்சரிக்கும் ஆற்றல் கூட இதற்கு உண்டு.இந்த software ஐ உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து மகிழுங்கள்.பிடித்திருந்தால் comments போடுங்கள்.
Posted by SPEED WORLD at 8:24:00 PM 0 comments
CATEGORIES: PC TRICKS
Tooth Brush ஐ எப்படி தயாரிக்கிறார்கள்
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" என்பது போல ஆதிகால மனிதன் ஆலம் பால்,வேப்பங் குச்சி போன்றவற்றால் பல் துலக்கி வந்தான். அந்த காலம் எல்லாம் மாறி விட்டது.வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகிலே நாம் அனைவரும் பல் துலக்குவதற்கு ஆலம் பால் வேப்பங்குச்சி எல்லாம் பயன்படுத்துவதில்லை.இன்று உலகளாவிய ரீதியில் அனைவரும் பயன்படுத்துவது Tooth Brush ஏயாகும்.ஆனால் எம்மில் அனேகமானவர்களுக்கு Tooth Brush எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்று தெரியாது. அக்காட்சியை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
Posted by SPEED WORLD at 2:51:00 PM 0 comments
CATEGORIES: TECHNOLOGY
கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
Posted by SPEED WORLD at 11:54:00 AM 0 comments
CATEGORIES: HOME
Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய
- இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.
- இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
- ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர்.
- அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற இரண்டு பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
- இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
- இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும் இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால் செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.
- இந்த தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
- இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து கொள்ளலாம்.
- இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
- இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க.
Posted by SPEED WORLD at 11:29:00 AM 0 comments
CATEGORIES: PC TRICKS
கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06
- இந்த மேம்படுத்தப்பட்ட பதிவில் HTML5 பைல்களுக்கேன்றே பிரத்யோகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மென்பொருள் குரோம்,பயர்பாக்ஸ், IE மட்டுமின்றி தற்போது OPera மற்றும் சபாரி ஆகிய பிரவுசர்கள் மூலம் நம் கணினியில் உருவாகும் தேவையில்லாத பைல்களையும் முற்றிலுமாக நீக்குகிறது.
- க்ரோமில் அதிக முறை பார்க்கப்பட URL களை நீக்குகிறது.
- ஒபேரா உலவியில் கடைசியாக பார்த்த URL களை நீக்கு கிறது.
- இந்த மென்பொருள் தேவையில்லாத பைல்களை நீக்கி விடுவதால் நம் கணினியில் அதிக காலி இடம் உருவாகும்.
- புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
- இன்னும் பல பயனுள்ள வசதிகள் இந்த மென்பொருளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும்.
- இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
- இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
Posted by SPEED WORLD at 11:24:00 AM 0 comments
CATEGORIES: PC TRICKS
பவர்பொயின்ட் (.ppt) பைல்களை வீடியோவாக கொண்வேட் செய்ய
- இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அந்த பைலை கீழே உள்ள link இல் டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
- இன்ஸ்டால் செய்ததும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- முதலில் படத்தில் காட்டியுள்ள படி New Task என்ற பட்டன் மீது க்ளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள Add file(s) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- Add File(s) க்ளிக் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வீடியோவாக கன்வெர்ட் செய்ய விரும்பும் பவர்பாய்ன்ட் பைல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இதில் பல பைல்களை தேர்வு செய்து ஒரே வீடியோவாகவும் உருவாக்கி கொள்ளலாம்.)
- நீங்கள் பைலை தேர்வு செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த விண்டோவில் நீங்கள் மாற்ற விரும்பும் வீடியோ வகையை(Format) தேர்வு செய்யவும். (படத்தில் நான் குறிப்பிட்டு காட்டி இருக்கும் வகைகள் மட்டும் இலவசம். கீழே உள்ள பார்மட்களில் மாற்ற விரும்பினால் மென்பொருளை காசு கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும்).
- குறிப்பிட்ட பார்மட் தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் Convert என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இந்த பட்டனை அழுத்துவதற்கு முன் உங்கள் கணினியில் செயலில் வேறு ஏதேனும் மென்பொருள் இயங்கி கொண்டிருந்தால் அனைத்தையும் க்ளோஸ் செய்து விடவும்.
- அந்த Convert பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் எச்சரிக்கை செய்தி விண்டோவை OK கொடுத்தால் பவர்பாய்ன்ட் பைல் கன்வெர்ட் ஆக தொடங்கும்.
- நீங்கள் தேர்வு செய்த பைல்களின் அளவிற்கு ஏற்ப நேரம் எடுத்து கொள்ளும் காத்திருக்கவும்.
- கன்வெர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு அந்த வீடியோ பைல் ஓபன் ஆகும் அந்த வீடியோ பைலை இனி உங்களுக்கு தேவையான இடத்தில் உபயோகித்து கொள்ளலாம்.
Posted by SPEED WORLD at 11:16:00 AM 0 comments
CATEGORIES: PC TRICKS
பழுதான CD/DVD இலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.
ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.
Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.
இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.
தரவிறக்கச்சுட்டி : Download Get My Videos Back
Posted by SPEED WORLD at 10:53:00 AM 0 comments
CATEGORIES: HOME
நமது கம்ப்யூட்டர் முழுதும் ஸ்கேன் செய்யும் சாப்ட்வேர் ?
நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.
ஸ்கேன் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Posted by SPEED WORLD at 10:43:00 AM 0 comments
CATEGORIES: HOME
நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு
விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும்
ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும். இது போன்ற
பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப்
பற்றித் தான் இந்தப்பதிவு.
Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ்
இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி
எதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும்
மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும்
பிழைச் செய்தியை காட்டுகிறது.
இது போன்ற பிரச்சினைக்காக நாம்
விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL
கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://www.dll-files.com
இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL
கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக
தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி
நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி
வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
Posted by SPEED WORLD at 10:30:00 AM 0 comments
CATEGORIES: HOME
Temporary Fileகளை நீக்க பல வழிகள்..
டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல.எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem fileகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை
ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் ` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.சான்றாக நீங்கள் ஏதாவது வேர்ட்(Ms-Word) ஃபைலை பயன்படுத்தும் போது ஃபைலானது `IT CORNER.tmp போன்ற பெயரில் உருவாகும்.` குறியை வைத்து குறிப்பிட்ட ஃபைலானது Temporary ஃபைல் என்று அறிந்துகொள்ளலாம்.பொதுவாகவே tmp ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் இடத்தை விணாக்குபவைகளாகும்.எனவே இவற்றை எனவே இவற்றை குறிப்பிட்ட கால கட்டங்களில் அழித்துவிடுவது நல்லது.tmp ஃபைல்களை நீங்களாகவோ அல்லது ஏதாவது டூலை கொண்டோ அழிக்கலாம்.
- Disk defregment பயன்படுத்தினால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் வேண்டாத ஃபைல்கள் குவிந்துள்ள இடத்தினை மீட்கலாம்.Disk defregment பயன்படுத்துவதன் மூலம் tmp ஃபைல்களையும் அழிக்க முடியும்.
- My computer Iconஐ திறந்து C Driveஇனுள் உள்ள Windows Folderஐ திறந்து அதனுள் உள்ள Temp ஃபோல்டரை திறந்து அதனுள் உள்ள ஃபைல்களை அழித்து விடுங்கள்..
- Startmenu-->Programes-->Accessories-->System Tools வரை Browse செய்யுங்கள் அங்கு Maintenance Wizard Optionஐ தேர்வு செய்து டேம்பரரி ஃபைல்களை அழிக்கலாம்.
- அல்லது Run இற்கு சென்று (Windows7 பாவனையாளராக இருந்தால் Search option இல்) .tmp என தேடி அழிக்கலாம்.
- இந்த வழிகள் ஒன்றும் பிடிக்க வில்லையென்றால் Tmp ஃபைல்களை அழிக்க நீங்களே எளிய ஒரு Uttility உருவாக்கலாம்,Notepad ஐ திறந்து
C:>copy com a.bat
del/f/s/1 *.*tmp
என டைப் செய்து IT CORNER.bat என்ற பெயரில் டெக்ஸ்டாப்பில் Save செய்து கொள்ளுங்கள்..இனி tmp ஃபைல்கள் உருவாகும் போதெல்லாம் இதனை இரட்டைகிளிக் செய்து ஃபைல்களை அழிக்கலாம்..ஆனால் கணினிமென்பொருள் தேர்ச்சிபெற்றவருடன் இந்த செய்முறைகளை பரிட்சித்து பார்க்கவும்.
06.இவை தவிர டெம்பரரி ஃபைல்களை அழிக்க இணையத்தில் அதிய மென்பொருள்கள் கிடைக்கின்றன..அவை பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்..
Posted by SPEED WORLD at 10:29:00 AM 0 comments
CATEGORIES: HOME
கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க
இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
Posted by SPEED WORLD at 10:23:00 AM 0 comments
CATEGORIES: HOME
TIME NOW
OUR POSTS
-
▼
2011
(63)
-
▼
May
(63)
-
▼
May 09
(12)
- கணிதம் கற்க ஒரு இலகுவான சிறந்த மென்பொருள்: MS Mat...
- எந்த வகை வீடியோவையும் பார்த்து மகிழ புதியதொரு PLAYER
- Tooth Brush ஐ எப்படி தயாரிக்கிறார்கள்
- கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் ...
- Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசம...
- கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடி...
- பவர்பொயின்ட் (.ppt) பைல்களை வீடியோவாக கொண்வேட் செய்ய
- பழுதான CD/DVD இலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீ...
- நமது கம்ப்யூட்டர் முழுதும் ஸ்கேன் செய்யும் சாப்ட்...
- நம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும...
- Temporary Fileகளை நீக்க பல வழிகள்..
- கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க
-
▼
May 09
(12)
-
▼
May
(63)