Friday, May 20, 2011

சுவிற்ஷர்லாந்தின் SOLAR PLANE

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிற்ஷர்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு பிரான்ஸ், LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.


200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது.    இதில் பொருத்தப்பட்டுள்ள    சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியை கொண்டு இந்த விமானம் 26 மணி நேரம் பறக்கும் வல்லமை கொண்டது.   

இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50KM ஆக காணப்படுகின்ற போதிலும் இதனது வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த விமானம் சுவிற்ஷர்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD