Friday, May 20, 2011

ஆயுட்காலம் வரை ஒரே தொடர்பெண்ணை பேண Google Voice

மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).  உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது.

ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் (GMail) போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.
செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக (transcript) செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.



இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போல கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.
  
உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் அழைப்பு மணி (Ring) அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால்  காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் அழைப்பு மணி (Ring) அடிக்கும் படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் (Setup) செய்து கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு தொலைபேசி நிறுவனங்களும் வெவ்வேறு விதமான சலுகைகளுடன் சிறப்பான சேவையினை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கென நிரந்தர தொடர்பு எண் ஒன்றை பேணுவது என்பது இயலாத காரியம். இதற்கும்  கூகிள் வாய்ஸ் எண் ஒரு தீர்வாக அமையுகிறது.


நீங்கள் உங்கள் ஆயுட்காலம் வரைக்கும் நிரந்தர தொடர்புஎண்ணாக கூகிள் வாய்ஸ் எண்ணை வைத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் தொலைபேசி எண்களை மற்றும் போது அவற்றை கூகிள் வாய்சில் மாற்றினால் போதுமானது. உங்கள் கூகிள் வாய்ஸ் எண்ணுக்கு அழைக்கும் அழைப்புகள் நீங்கள் கொடுத்துள்ள புதிய தொலை பேசி எண்ணுக்கு தானாக மாற்றி விடப்படும்.

கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பவும் பெறவும் முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் (Online) சேமித்து கொள்ளவும் முடியும்.

உங்கள் தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr. Speed World. Please leave your message. I will call you later.' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்ற தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.


கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும்.

தற்சமயம் கூகிள் வாய்ஸ் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பு (Invite) மூலமாகவே நீங்கள் அதனை சோதித்து கொள்ள முடியும். அதுவும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூகிள் வாய்ஸ் (Google Voice) அழைப்பு (Invite) பெற கீழுள்ள சுட்டிக்கு செல்லவும். 


0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD