Sunday, May 15, 2011

Pendrive தொலையாமலிருக்க ஒரு பாதுகாப்பு

நாம் வேறு ,வேறு கணினிகளில் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மறந்து தொலைப்பதுண்டு. அப்படி ஏதும் நேராமலிருக்க நாம்  எமது Pendrive இல் ஒரு எச்சரிக்கை ஏற்பாட்டை செய்ய முடியும்.
                            இதற்காக நாம் Pendrive Reminder மென்பொருளை  தரவிறக்கம் செய்து எமது Pendrive இல் தன்னிச்சையாக செயற்படுத்த முடியும். அப்படி செய்தோமானால் எமது Pendrive ஐ எடுக்கச்சொல்லி எச்சரிக்கை செய்யுமாறு எம் தேவைக்கேற்ற மாதிரி இயங்க வைத்து கொள்ளலாம். 

 இந்த வகையில்
  • எமக்கான முதல் தெரிவாக எமது Pendrive ஐ அகற்றாமல் கணினியை அணைக்க (Shutdown) முற்பட்டாலோ அல்லது எமது பயனர் கணக்கிலிருந்து (User Account) வெளியேற (Logoff)  முற்பட்டாலோ எச்சரிக்கை தரும்.
  • இரண்டாவது தெரிவாக குறித்த நேரத்தில் நமக்கு எச்சரிக்கை தரும் படி நேரத்தையும் குறித்து கொள்ளலாம்.
  • அடுத்து நாம் எவ்வளவு நேரம் வேலை செய்ய இருக்கின்றோம் என்பதை பொறுத்து நிறுத்தற்கடிகாரம் போலவும் எச்சரிக்கையை செயற்படுத்தலாம்.
  • அவ்வாறு எச்சரிக்கை தரும் சமயத்தில் நமது வேலை முடியவில்லை என்றாலும் அல்லது நாம் அதை பொருட்படுத்தவில்லை என்றாலும் அது தனது கடமையை குறித்த நேர இடைவெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். எவ்வளவு நேர இடைவெளியில் நினைவு படுத்த வேண்டும் என்பதை File --> Config இல் சென்று நாமே குறித்து கொள்ள முடியும். 
  • இது தவிர எமது Pendrive இலுள்ள விபரங்களை பாதுகாத்துகொள்ளவும் முடியும்.
இனி நாம் Pendrive ஐ மறந்து செல்ல வேண்டிய வாய்ப்பே இருக்காது.



0 comments:

http://leetleech.org/images/53757816173815256798.png
copyright © 2011: SPEED WORLD